You Are Here: Home» » கையடக்க யூஎஸ்பியை கணினிபோன்று செயற்படுத்தலாம்.


இதற்கு தேவையானவை
  1. 16 ஜிபி யும் அதற்கு மேலும் கொள்ளளவு கொண்ட யூஎஸ்பி
  2. 4 ஜிபி கொள்ளளவிற்கு மற்றொரு தற்காலிக யூஎஸ்பி
  3. சமீபத்திய உபுண்டு வினக்ஸ்ஸின் ஐஎஸ்ஓ கோப்பு அதாவது உபுண்டு 14.04 பதிப்பு http://www.ubuntu.com/download/desktop/ எனும் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்க
4.விண்டோ இயக்கமுறைமையில் செயல்படுவதற்காக லினக்ஸ் நிறுவுகை செய்திடும் கோப்பினை http://unetbootin.sourceforge.net/ என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துவைத்து கொள்க


முதலில் வரிசையெண் 3-இல் குறிப்பிடபட்டுள்ள இணையதளத்திலிருந்து உபுண்டு 14.04 எனும் நீண்டகால ஆதரவுள்ள இயக்கமுறைமையின் ஐஎஸ்ஓ கேப்பினை பதிவிறக்கம் செய்து கொள்க

பின்னர் வரிசையெண் 4 இல் குறிப்பிடபட்டுள்ள லினக்ஸ் நிறுவுகை செயலை செயல்படுத்துபவரை பயன்படுத்தி தற்காலிக யூஎஸ்பியில் இந்த உபுண்டு 14.04 எனும் இயக்கமுறைமையை தற்காலிகமாக நிறுவுகை செய்துகொள்க
அதன்பின்னர் இந்த தற்காலிக லினக்ஸ் இயக்கமுறைமையுடன் கூடிய யூஎஸ்பியை நாம்விரும்பும் கணினி அல்லது மடிக்கணினியில் இணைத்து அதன் இயக்கத்தை நிறுத்தம் செய்து மறுதொடக்கம் செய்திடுக
அவ்வாறு மறு தொடக்கம் செய்திடும் போது F12 எனும் செயலி விசையை அழுத்துக அல்லது Shift+Del ஆகிய விசைகளை சேர்த்து அழுத்துக
உடன் கணினியின் தொடக்கஇயக்கம் நாம் இணைத்த யூஎஸ்பியின் வாயிலாக இருக்கும்

அதன்பின்னர் தோன்றிடும் திரையில் தேவையான வாய்ப்பினை தெரிவுசெய்துகொண்டு உள்ளீட்டு விசையை அழுத்துக
அதற்கடுத்து தோன்றிடும் திரைகளில் Installation Type எனும் திரைதோன்றும் வரை Continue எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல்செய்துகொண்டுவருக.

Installation Type எனும் திரையில் Something else எனும் வாய்ப்பை தெரிவுசெய்துகொண்டு continue எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக.
அதற்கடுத்து தோன்றிடும் திரையில் நாம் நிறுவுகை செய்திடவிரும்பும் யூஎஸ்பியின் நினைவகத்தை ext4, swap ஆகிய இரு பாகப்பிரிவினையாக செய்துகொண்டு ext4 யில் இடம்சுட்டி இருப்பதை உறுதிசெய்துகொண்டு install now எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்க.
அதற்கடுத்ததாக தோன்றிடும் திரைகளில் வழக்கம்போன்று Continueஅல்லது next ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டுவருக.

மிகமுக்கியமாக பயனாளரின்பெயர் கடவுச்சொற்கள்உள்ளீடு செய்யவேண்டிய திரையில் மிககவணமாக அவற்றை உள்ளீடு செய்து கொண்டு restart now எனும் திரைதோன்றிடும் வரையில் வழக்கம்போன்று Continue அல்லது next ஆகிய பொத்தான்களை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்துகொண்டுவருக

restart now எனும் திரையில் பிரச்சினை எதுவுமில்லாமல்வெற்றிகரமாக உபுண்டு 14.04 இயக்கமுறைமையை யூஎஸ்பியில் நிறுவுகை செய்திருந்தால் இந்த restart now எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குதல் செய்து கணினியின் இயக்கத்தை மறுதொடக்கம் செய்திடுக

குறிப்பு உபுண்டு இயக்கமுறைமையை யூஎஸ்பியில் நிறுவுகை செய்திடும்போது 32 பிட்டில் செயல்படும் பதிப்பை பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கபடுகின்றது ஏனெனில் 64 பிட் பதிப்பெனில் 64 பிட் உள்ளவைகளில் மட்டுமே செயல்படும் 32 பிட் எனில் 32 பிட் ஆக இருந்தாலும் 64 பிட் ஆக இருந்தாலும் செயல்படும் என்பதை கவணத்தில் கொள்க
Tags:

0 comments

Leave a Reply